முதல்வர் கான்வாய் முன்பு பைக்கில் ஸ்டண்ட் செய்த இளைஞர்.. மடக்கி பிடித்து சரியான ஆப்பு வைத்த போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Aug 30, 2022, 11:31 AM IST

சென்னையில் முதல்வர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சென்னையில் முதல்வர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முதலமைச்சர் சாலையில் செல்லும் போது அவரது பயணத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகள் சீராக்கப்பட்டு மற்ற போக்குவரத்துகள் மற்றும் தனி நபர்கள் யாரும் சாலையில் குறுக்கே வராமல் இருக்க பலத்த பாதுகாப்பு செய்யப்படும். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீட்டில் இருந்து தலைமைச்செயலகத்திற்கு கிளம்பினார். முதல்வரின் காருக்கு முன்பும் பின்பும் வழக்கமான பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றுள்ளன.

Tap to resize

Latest Videos

அப்போது, சென்னை மெரினா காமராஜர் சாலையில் முதல்வரின் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்துள்ளார். இதனையடுத்து, உடனே அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை ராயப்பேட்டையை  சேர்ந்த சுஜய் (20) என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனத்தை முந்தி சென்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!