திருமணம் செய்வதாக இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணுக்கு கோவை தொழிலதிபர்களிடம் தொடர்பாம்; விசாரணை தொடர்கிறது...

 
Published : Jan 16, 2018, 08:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
திருமணம் செய்வதாக இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணுக்கு கோவை தொழிலதிபர்களிடம் தொடர்பாம்; விசாரணை தொடர்கிறது...

சுருக்கம்

To a girl who cheated on the marriage as a marriage is concerned with the Coimbatore entrepreneurs Investigation continues ...

கோயம்புத்தூர்

திருமணம் செய்வதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றி பலகோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண் ஸ்ருதிக்கு கோவையை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களுடன் தொடர்பு இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ருதி (21). இவர் திருமண ஆசை காட்டி பொறியாளர்கள், பணக்கார இளைஞர்களை மடக்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பொறியாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவலாளர்கள் ஸ்ருதியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் ஸ்ருதியின் தாயார் சித்ரா, அவருடைய இரண்டாவது கணவர் பிரசன்னா வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகியோரையும் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், ஸ்ருதியிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.30 இலட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள், ரூ.4 இலட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ருதியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் எண்கள் மூலம் அவர் எத்தனை பேரிடம் தொடர்புவைத்து, பேசியுள்ளார் என்பது குறித்த பட்டியலை காவலாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.

இதனிடையே ஸ்ருதி திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 11 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ருதியின் முகநூலை காவலாளர்கள் ஆய்வு செய்ததில் அவருடைய கவர்ச்சி படங்கள் அதிகளவில் இருந்தன. மேலும், நண்பர்கள் பலரிடம் சேர்ந்து கவர்ச்சி நடனமாடுவது போன்ற வீடியோக்களும் இருந்தன. வேறு யாரும் அந்த படங்களை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக காவலாளார்கள் ஸ்ருதியின் முகநூலை முடக்கியுள்ளனர்.

தற்போது சிறையில் இருக்கும் ஸ்ருதியை காவலாளர்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

இதுகுறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறியது: "ஸ்ருதியுடன், கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் தொடர்பு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால், அது அவர்கள் இருவருக்கும் தெரியாது.

இவர்கள் இருவரும் பிரபல தொழில் அதிபர்கள் என்பதால், அவர்களிடம் பலமுறை ஸ்ருதி பணம் பறித்துள்ளார். அவர்கள் இருவரும்தான் காவல் வழக்குகளில் இருந்து தப்பித்துச் செல்ல ஸ்ருதிக்கு உதவியாக இருந்துள்ளனர்.

எனவ, அந்த தொழில் அதிபர்கள் இருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்ருதியின் வங்கி கணக்கை சோதனை செய்ததில் அதில் பணம் இல்லை. அவர் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளதால், பலரிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்து சினிமா தயாரிக்க பணம் கொடுத்து இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, அவருக்கு தெரிந்த துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக ஸ்ருதியிடம் விசாரணை நடத்தினால்தான், அவரிடம் தொடர்புள்ள துணை நடிகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியவரும்.

எனவே, அவரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். மேலும் ஸ்ருதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக புகார் கொடுக்கலாம்" என்று காவல் உயர் அதிகாரி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!