குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தது 22.2 லட்சம் பேர்… ஆனால் எழுதியது? டி.என்.பி.எஸ்.சி அதிர்ச்சி தகவல்!!

Published : Jul 24, 2022, 06:58 PM IST
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தது 22.2 லட்சம் பேர்… ஆனால் எழுதியது? டி.என்.பி.எஸ்.சி அதிர்ச்சி தகவல்!!

சுருக்கம்

குரூப் 4 தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் நடந்தது என்ன..?

தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது. இந்த நிலையில் இந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..

இந்த தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட 3 மணி நேரம் போதவில்லை என்றும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் தாமதமாக வந்தவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் கண்ணீருடன் திரும்பி சென்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!