தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தெரிவித்துள்ளது.
நிறுவனம்: மீன்வளத்துறை
காலி பணியிடங்கள்: 88
பணியின் பெயர்: ஆய்வாளர், துணை ஆய்வாளர்
பணியின் விவரம்:
ஆய்வாளர் - 64
துணை ஆய்வாளர் - 24
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150 ஆக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.100 ஆக செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
துணை ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல், விலங்கியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தள்ளிப்போகும் குரூப் தேர்வு முடிவுகள்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..