குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மார்க் எவ்வளவு? முழுவிபரம் உள்ளே!!

By Narendran SFirst Published Nov 28, 2022, 11:52 PM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்தும் கட் ஆஃப் மார்க் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்தும் கட் ஆஃப் மார்க் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களுக்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர் விண்ணப்பத்தினர். இதை அடுத்து கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்ததால் முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு பற்றி அவதூறு கருத்து… கிஷோர் கே சுவாமியை விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி!!

பின்னர் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தேர்வு செயல்முறைகளில் மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதால், தேர்வாணையம் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களைச் செய்து வருகிறது. எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் பொதுப்போட்டியில் கட் ஆஃப் குறைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சபரிமலைக்கு செல்ல வாராந்திர சிறப்பு ரயில்… பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு!!

அதன்படி, தமிழ் பாடத்தில் 90 முதல் 95 வரை மதிப்பெண்கள் பெறும் தேர்வர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் நல்ல இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு மட்டும் தயாராகி வருபவர்களால் எளிதாக மதிப்பெண்கள் எடுக்க முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பொது பிரிவினர் 173 , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 168 மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 165, பட்டியலின வகுப்பினர் 155, பழங்குடியினர் 150 கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இது வெறும் தோராயமான கட் ஆஃப் மதிப்பெண்கள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.

click me!