டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ள நிலையில் அதனை பதவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ள நிலையில் அதனை பதவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. முன்னதாக டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 தேர்வுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து கடந்த 15.09.2022 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் இந்த தேர்வுக்கு விண்ணபித்துள்ள நிலையில் தற்போது குரூப் 3 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை அரைமணி நேரம் முன்பே மூட முடியுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு, கொள்குறி வகையில் நடைபெற உள்ளது. தேர்வு ஜனவரி 28 அன்று முற்பகலில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு நிச்சய வேலைவாய்ப்பு இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
எதிர்கால பயன்பாட்டுக்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.