TNPSC Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

Published : Feb 16, 2023, 11:44 AM ISTUpdated : Feb 16, 2023, 12:12 PM IST
TNPSC Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு வரும் 25ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு உயர்நிலை பணிகளுக்கான வரும் 25 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது.

இந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு இதற்கான நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வை 10 லட்சம் தேர்வர்கள் முதல் நிலை தேர்வை எழுதினர். அந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 57,641 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை தேர்வு எழுத உள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் செய்ய திட்டமா? செயற்கையாக காலதாமதம் செய்யப்படுகிறதா? சீமான் ஆவேசம்

இத்தேர்வுகளை எழுதுபவர்கள் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://www.tnpscexams.in/ ஆகிய வலைத்தளங்களுக்குச் சென்று ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வரும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வு நடந்து 7 மாதம் ஆகிவிட்டது! இன்னும் முடிவை வெளியிடாதது ஏன்? தேர்வாணையத்தின் படுதோல்வி - ராமதாஸ்

PREV
click me!

Recommended Stories

ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
Tamilnadu 12th Result: 12ம் வகுப்பு முடிவுகள் வெளியாகுவதில் சிக்கல்.. என்ன காரணம்? லேட்டஸ்ட் ரிப்போர்ட்!