குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த 24.07.2022 அன்று குரூப் 4 தேர்வை நடத்தியது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்.! 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.! திமுகவினரை அலறவிடும் அண்ணாமலை
இதனிடையே டிவிட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதுமட்டுமின்றி மீம்ஸ்களும் இணையத்தை நிரப்பின. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம்.
இதையும் படிங்க: விருதுநகரில் கோர விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய இருசக்கர வாகனம்: பெண் பலி
OMR விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. பிழைகளை கணினி மூலம் அடையாளம் காண நேரடி அலுவலர் மூலம் உறுதி செய்ய அவகாசம் தேவை. குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தின் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.