மக்களே கவனம்… 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…! புரட்டி போடும் மழை

By manimegalai aFirst Published Oct 19, 2021, 7:46 AM IST
Highlights

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந் நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறி இருப்பதாவது:

இலங்கை, அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிரொலிய பல மாவட்டங்களில் மிக கனமழையும், கனமழையும் பெய்யும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.

வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை எனப்படும் மிக கனமழை பெய்யும். சென்னையில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!