புத்தாண்டு அன்று பைக்ரேஸ் நடப்பதை தடுக்க நடவடிக்கை... புதிய வியூகம் வகுத்த சென்னை காவல்துறை!!

Published : Dec 30, 2022, 10:36 PM IST
புத்தாண்டு அன்று பைக்ரேஸ் நடப்பதை தடுக்க நடவடிக்கை... புதிய வியூகம் வகுத்த சென்னை காவல்துறை!!

சுருக்கம்

இருசக்கர வாகனங்கள் கும்பலாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இருசக்கர வாகனங்கள் கும்பலாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள். வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!

இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் நாளை (டிச.31) இரவு பைக்ரேஸ் நடத்துவதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு மேல் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கும்பலாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதனை உறுதிசெய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தாயார் மறைவு.. தமிழக தலைவர்கள் இரங்கல்.!!

அதுமட்டுமின்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, ஒலிபெருக்கிகள் வைப்பது போன்றவைக்கு அனுமதி இல்லை என்றும் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ள காவல்துறை, இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!