பிரதமர் மோடியின் தாயார் மறைவு.. தமிழக தலைவர்கள் அஞ்சலி.!!

Published : Dec 30, 2022, 10:20 PM ISTUpdated : Dec 30, 2022, 10:45 PM IST
பிரதமர் மோடியின் தாயார் மறைவு.. தமிழக தலைவர்கள் அஞ்சலி.!!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி  ஹீராபெண் மோடி மறைவுக்கு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சி தமிழகத்தில் மாவட்ட பாஜக  அலுவலகத்தில், மண்டல அளவிலும் ஆங்காங்கே நடைபெற்றது.

தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் ஜெயக்குமார்,வளர்மதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து அஞ்சலி செலுத்தினர். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் தனபாலன், இந்திய தேசிய லீக் சார்பில் ஷேக் தாவூத், வி.ஜி. சந்தோஷம், யாதவ மகா சபை தேவநாதன், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார், தயாரிப்பாளர் திரு ஐசரி கணேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

காலை 9.30 மணிக்கு வள்ளியூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மறைந்த பிரதமரின் தாய் ஹீராபெண் மோடி அவர்களின் திருவருவப்படத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் வி.கே சிங் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?