மாரிதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த மதுரைக்கிளை… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது காவல்துறை!!

Published : Oct 13, 2022, 10:52 PM IST
மாரிதாசுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த மதுரைக்கிளை… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது காவல்துறை!!

சுருக்கம்

தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூபர் மாரிதாசுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

தப்லிக் ஜமாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூபர் மாரிதாசுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் தான் காரணம் என கருத்து பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: வங்கி ஊழியருக்கு ஹாப்பி நியூஸ்... விரைவில் வெளியாக உள்ள சூப்பர் அறிவிப்பு!!

இதை அடுத்து கொரோனா காலத்தில் தப்லீக் ஜமாத் தொடர்பாகவும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டதாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. ஏற்கனவே வேறொரு புகாரில் கைதாகி இருந்து மாரிதாஸ் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: சாப்பிடும்‘தட்டு’; தேங்காய் ‘ஸ்ட்ரா’! 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி அழைப்பு

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்-தான் காரணம் என கருத்து பதிவிட்ட யூடியூபர் மாரிதாசு என்பவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!