தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக மாநில அரசால் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக மாநில அமைச்சர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நிதி திரட்டும் பொருட்டு கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி தமிழக முதல்வரால் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் முதல் நபராக திட்டத்திற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
10 ஆண்டு குடும்ப வாழ்க்கை ஆனால், திருமணம் செய்ய மறுக்கிறார்; மதபோதகர் மீது பெண் புகார்
திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி கிடைத்தது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு. கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.
தை அமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய திராவிட மாடல் ஆட்சியாளர்கள்
மேலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகியோரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், சதன் திருமலைகுமார், ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.