Tamilnadu Local Body Election Results: கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க. தர்ணா!

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 22, 2022, 09:47 AM IST
Tamilnadu Local Body Election Results: கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க. தர்ணா!

சுருக்கம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கும்பகோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் தமிழகம் முழுக்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோனம் பகுதியில் எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. 

இந்த நிலையில், கும்பகோணம் வாக்கு எண்ணும் மையத்தினுள் அதிக அளவில் தி.மு.க.வினர் அனுமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டு வருகின்றனர். தர்ணாவில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க. வேட்பாளர்களுடன் காவல்துறை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தான் கும்பகோணம் மாநகராட்சி உதயமானது. கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. யார் வெற்றி பெறுவர்கள் என்ற எதிர்பாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரின் திடீர் தர்ணா போராட்டம் காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி