
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19,ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக சார்பில் 70 வது வார்டில் போட்டியிடும் அமைச்சர் கீதாஜீவன் சகோதரர் ஜெகன் பெரியசாமி மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 இடங்களிலும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.