
யார் மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. தற்போதை நிலவரப்படி தி.மு.க. 57 வார்டுகளில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும் அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற்றது. 100 மாமன்ற பதவிகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 815 வேட்பாளர்களும். 3 நகராட்சிகளில் 78பதவிகளுக்கு 335வேட்பாளர்களும், 9 பேரூராட்சிகளில் 126பதவிகளுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 313 பதவிகளுக்கு 1702 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர்.
தற்போதைய நிலவரப்படி மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.பெரும்பான்மை பலத்துடன் திமுக வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 100 வார்டுகளில் 70 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.மதுரை மாநகராட்சியில் அதிமுக 12, இதரகட்சிகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.