கொரோனா இன்னும் முடியல.. மக்கள் உஷாரா இருக்கணும்.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

By Raghupati R  |  First Published Jun 8, 2022, 12:57 PM IST

Tamilnadu Corona :  தற்போது உலகளவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒமிக்ரான் உள்வகை தான் லேசாக உள்ளது. இதில் BA 1 2 3 அதிகமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பிஏ2 தான் இருந்து வந்தது. 


காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டிற்கான பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதால் இப்பயிற்சி மையத்தில் அந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த 16 பேரை தனிமைபடுத்தி உள்ளனர். இங்கு செய்துள்ள கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன். 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ இந்தியாவில் குறிப்பாக மஹாராஷ்டிரா, மும்பை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா ஏறுமுகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி மிகக்குறைவாக நாள் ஒன்றிற்கு 22 என பதிவானது. தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகிறது. 

Tap to resize

Latest Videos

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களை தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்று இரண்டு பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் நேற்றையதினம் பதிவாகின. அதன்படி இந்த பயிற்சி மையத்தில் வெளிமாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் பயிற்சி பெறுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாநில பயணம் செய்வதால் இங்கு 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தனிமைப்படுத்தப்பட்ட 16 பேருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்தது. இது ஆறுதல் அளிக்க கூடிய வகையில் உள்ளது. தற்போது உலகளவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஒமிக்ரான் உள்வகை தான் லேசாக உள்ளது. இதில் BA 1 2 3 அதிகமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பிஏ2 தான் இருந்து வந்தது. இது தவிர ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி மையங்களில் ஆய்வு செய்த போதும் எல்லோருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்து வருகிறது. தொண்டை கரகரப்பு லேசான காய்ச்சலுடன் சரியாகி வருகின்றனர். 

பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது, இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும்.  அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. கோவிட் கொந்தளிப்பை நாம் வெற்றிகரமாக குறைத்தோம் தற்போது கரை ஒதுங்கும் போது முழுமையாக அழிக்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்து மீண்டும் இதனை பெரிய அளவில் முன்னேறவிடாமல் தடுக்க வேண்டும்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : Sabarimala : சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி.!

இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !

click me!