திடீரென்று தீப்பிடித்து எரிந்த ”ராயல் என்ஃபீல்டு பைக்”.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வாகன ஓட்டி..பரபரப்பு காட்சி

Published : Jun 08, 2022, 12:31 PM ISTUpdated : Jun 08, 2022, 12:34 PM IST
திடீரென்று தீப்பிடித்து எரிந்த ”ராயல் என்ஃபீல்டு பைக்”.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய வாகன ஓட்டி..பரபரப்பு காட்சி

சுருக்கம்

சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென தீப்பிடித்து எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நுங்கம்பாக்கம் அருகே வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக இன்று காலை இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த அவர், உடனடியாக தனது பைக்கை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது சிறிது நேரத்திலேயே பைக் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றார். தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும் பைக்கில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. 

இதையடுத்து, தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயினை அணைத்தனர். மேலும் பைக்கில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபர் சமயோஜிதமாக ஆபத்தை உணர்ந்து, பைக்கை நிறுத்தியதால், நல்வாய்ப்பாக உயர் தப்பினார். இருப்பினும், நடுரோட்டில் திடீரென்று ராயல் என்ஃபீல்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2வது நாளாக சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்... வெளியான தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!