அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு: தமிழக அரசு தகவல்!

By Manikanda Prabu  |  First Published Oct 13, 2023, 6:02 PM IST

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் விரிவு படுத்துவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது


முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரிவுபடுத்தப்பட்டது.

முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் கீழ், சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள்  தற்போது பயனடைந்து வந்த நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேசில் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோர மீனவ மக்களின் பொருளாதார நிலை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.  எனவே, கடலோரப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

டிபிஐ வளாகத்தில் போராட்டத்துக்கு இனி அனுமதி கிடையாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

 இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்வதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் நிநிநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் இனிவரும் காலத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிமன்றம், ழக்கை முடித்து வைத்தது.

click me!