வரும் 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனால், காளைகளை மிருக வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காட்சிப்படுத்தப்பட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்த்தது.
இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. அதன்பின் கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடை பெறவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு தை பொங்கலுக்கும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !
இதனை அடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !