தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Jan 26, 2022, 08:25 PM IST
தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறை சார்ந்தும் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டும் பல திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை சங்கரன்கோவில் உள்ளிட்ட 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!