34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Jan 01, 2023, 09:25 PM IST
34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

தமிழகத்தில் 34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சிஞ்சோங்கம் ஜடக் சிறு, உலக வர்த்தக மையத்தின் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் மற்றும் பிரதிநிதி பிரஜேந்திர நவனீத், டெல்லி தமிழ்நாடு இல்லம் ஆணையர் ஆஷீஷ் சாட்டர்ஜி, கோவை ஒழுங்கு நடவடிக்கை செயலாளர் தேவராஜ் தேவ் ஆகியோருக்கு அரசு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சென்னையில் 932 வாகனங்கள் பறிமுதல்... புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறயதால் நடவடிக்கை!!

அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ், பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சிப்காட் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி, வீட்டுவசதித்துறை மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், ஆவின் மேலாண்மை இயக்குநர் சுப்பையன், குடிநீர் வழங்கல் துறை மேலாண்மை இயக்குநர் தக்‌ஷிணா மூர்த்தி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்… குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்ததை அடுத்து முடிவு!!

செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், உணவு வழங்கல் துறை இணை மேலாண்மை இயக்குநர் கற்பகம் உள்பட 34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!