இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்… குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அறிவித்ததை அடுத்து முடிவு!!

By Narendran SFirst Published Jan 1, 2023, 8:54 PM IST
Highlights

குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்ததை போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். 

குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்ததை போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1 ஆம் தேதி பணிநியமனம் செய்யப்பட்ட  ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும்.! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அருமையான வேலைவாய்ப்பு

இதையடுத்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில முழுவதிலும் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையும் படிங்க: சென்னையில் 932 வாகனங்கள் பறிமுதல்... புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறயதால் நடவடிக்கை!!

இந்த நிலையில் சம வேலை சம ஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

click me!