
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸ்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடூரமாக தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் தமிழகமே குலுங்கியது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷ வாயு கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.