துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர்! எப்ஐஆரில் வெளியான திடுக் தகவல்

 
Published : May 28, 2018, 03:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது இரண்டு பேர்!  எப்ஐஆரில் வெளியான திடுக் தகவல்

சுருக்கம்

2 FIR registered on two people

திரேஸ்புரத்தில் மண்டல துணை வாட்டாட்சியார் கண்ணன் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. துணை வாட்டாட்சியார் கண்ணன் ஆய்வாளர் பார்த்திபனுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸ்காரர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்குப் பின் இன்னும், தூத்துக்குடியில் இயல்பு நிலை முழுதாகத் திரும்பவில்லை. கடைகள் திறப்பதும், பேருந்துகள் ஓடுவதும்தான் இயல்பு வாழ்க்கை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்புகிறது. ஆனால் மக்கள் மனதிலிருந்து அச்சமும் கோபமும் இன்னும் முழுதாக அகலவில்லை.

இந்நிலையில், துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  துப்பாக்கி சூடு பற்றி   சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  தனி துணை  வாட்டாட்சியார்  சேகர், சிப்காட் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு உத்தரவிட்டதன் பேரில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரேஸ்புரத்தில் மண்டல துணை வாட்டாட்சியார் கண்ணன் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. துணை வாட்டாட்சியார் கண்ணன் ஆய்வாளர் பார்த்திபனுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!