
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், 13 மக்கள் உயிர் பலியாகி இருக்கிறது. இன்னும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன்? யார் இந்த துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது என மக்களும் ஊடகங்களும் மாறி மாறி கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. போலீசார் இச்சம்பவம் குறித்து பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையின் படி, இந்த துப்பாக்கி சூட்டிற்க்கு உத்தரவிட்டது ”கண்ணன் மற்றும் சேகர்” எனும் இரண்டு வட்டாட்சியர்கள் தான் என இப்போது தெரியவந்திருக்கிறது.
போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை கட்டுபடுத்தவும், அந்த வன்முறையில் பொதுசொத்துக்கள் சேதப்படுவதை தவிர்க்கவுமே, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.