பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

By Manikanda Prabu  |  First Published May 31, 2024, 4:23 PM IST

கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது


தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நடப்பாண்டில் மக்களவைத் தேர்தலும் நடைபெற்றதால் இதர வகுப்புகளுக்கும் முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி, 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையும், 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

Tap to resize

Latest Videos

பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாவதால் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய தினமே 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதிஉ பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூலை 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

click me!