போலீசாரை நடுரோட்டில் ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்.. அலறிய ஓடிய பொதுமக்கள்.. என்ன காரணம்?

By vinoth kumar  |  First Published May 31, 2024, 2:46 PM IST

கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது. அவர்களது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கிவைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.


போலீசாரை நடுரோட்டில் ஓட ஒட அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தலைமைக் காவலர்கள் தங்கதுரை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கரத்தை நிறுத்தாமல் சென்ற 4 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்தியதில் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் மகன்கள் மகேஷ் (26), பெர்லின் (24), கஜேந்திரா (22), மரிய சுந்தரம் மகன் நவீன் (27) என்பது தெரியவந்தது. அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருப்பதும் தெரியவந்தது. அவர்களது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கிவைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரலைன்னா! வீடியோவை வெளியிட்டு விடுவேன்! பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!

இந்நிலையில், தனது தம்பிகள் கைதான செய்தியை அறிந்து  கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று,  கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டதால் திரும்பி தரமுடியாது என போலீசார் கூறியுள்ளனர். இதனால் போலீசார் மீது கல்யாணசுந்தரம் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில்  ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே தலைமைக் காவலர்கள் தங்கதுரை, ஜான்சன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு  இருசக்கர வாகனத்தில் கல்யாண சுந்தரம், அவரது நண்பர் நிர்மல்குமார் ஆகியோர் தலைமைக் காவலர்களிடம் தகராறு செய்து ஓட ஓட அரிவாளால் வெட்ட முயன்றனர். ஆனால் ஜான்சன் தலைமைக்காவலரை காப்பாற்றியதால் சிறிய வெட்டு காயங்களுடன் உயிர் தப்பியதை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

இதையும் படிங்க: வாய் கூசும் அளவுக்கு டபுள் மீனிங்! ஆபாச ஆங்கரால் பெண் தற்கொலை முயற்சி!VJ ஸ்வேதாவை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்

காயம் அடைந்த தங்கதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் ஆலங்குளம் அருகே உள்ள நாச்சியார்புரம் விலக்கு காற்றாலை பகுதியில்  பதுங்கி இருந்த கல்யாண சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். 

click me!