#Breaking:ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் ..ஆனால்..! இதற்கெல்லாம் தடை.. பார்வைகளுக்கு கட்டுபாடுகளுடன் அனுமதி..

By Thanalakshmi VFirst Published Jan 10, 2022, 3:20 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு கட்டுபாடுகளுடன் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 300 மாடுபிடிவீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பல்வேறு கட்டுபாடுகளுடன் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 300 மாடுபிடிவீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஒருபுறம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து  அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி காண அனுமதிக்கப்படுவர் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்திருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சர் இன்று வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு வெளியானபிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், அதேசமயம் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படிருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

click me!