என்ன நடவடிக்கை எடுத்தீங்க? கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர் ரவி

By SG Balan  |  First Published May 17, 2023, 7:27 PM IST

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆர். என். ரவி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.


தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆர். என். ரவி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளச்சாராயம் என்ற பெயரில் ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த பானத்தை அவர்கள் உட்கொண்டனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகிய கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இதில் அரசியல் கட்சியினருக்குத் தொடர்பு உள்ளதா விசாரணை நடத்தப்படுகிறது.

கொளுத்தும் கோடை வெயில்… மின் தடையால் அவதிக்குள்ளான மக்கள்... மின் துறை அமைச்சரின் சூப்பர் தகவல்!!

ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) செவ்வாய்கிழமை தானாக முன்வந்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஆளுநர் அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கேட்டிருக்கிறார். விரைவில் அந்த அறிக்கையைத் தயாரித்து ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சித்துவரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரிலும் சந்தித்துப் பேசியுள்ளார்.

உங்கள் ஊரில் மின்தடை எப்போது? TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்!

click me!