தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெறவுள்ள மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து முடித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இத்திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
“பழிவாங்குவதில் கவனம் செலுத்தாதீர்கள் பிரதமரே” தனிமைப்பட்டு விடுவீர்கள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ் புதல்வன்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.
மேலும் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் எண்ணை எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுருத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் ஆதார் மையம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.