“பழிவாங்குவதில் கவனம் செலுத்தாதீர்கள் பிரதமரே” தனிமைப்பட்டு விடுவீர்கள் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Jul 24, 2024, 7:48 PM IST

மத்திய நிதிநிலை அறிக்கையில், பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


2024 - 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு நேற்றைய தினம் தாக்கல் செய்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் பாஜக, பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாறாக எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன.

பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வேண்டுமா? அதுக்கு நீங்க 25 எம்.பி. குடுத்துருக்கணும் - அன்புமணி சர்ச்சை பேச்சு

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே… 

“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது! அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

சீனியர், ஜூனியர் பாரபட்சம் கிடையாது; 6 மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை - கோவை இளைஞன் கைது

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

click me!