ரஜினியை அதிர வைத்த விவசாய சங்கத்தின் 7 கேள்விகள்..!!!

 
Published : May 20, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ரஜினியை அதிர வைத்த விவசாய சங்கத்தின் 7 கேள்விகள்..!!!

சுருக்கம்

TN farmers 7 question to rajinikanth

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்து வந்தார். 

கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த இந்த சந்திப்பு நேற்றுடன் முடிவைடைந்தது. கடைசி நாளான நேற்று அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் பரபரப்பாக பேசினார்.

மேலும், தான் ஒரு பச்சை தமிழன் என்றும், கர்நாடகத்தில் இருந்ததை விட தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளேன் என தெரிவித்தார். 

இதுகுறித்து தமிழகத்தில் பலரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அதன்படி விவசாயிகள் சங்கம் ரஜினியை அதிர வைக்குமாறு 7 கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவை வருமாறு...

நதிநீர் இணைப்பிற்கு நான் ஒரு கோடி நன்கொடை தருவேன் என்றீர்களே என்னாவாயிற்று?

நதிகள் இணைப்பு திட்டத்தை தாங்களே முன் நின்று மற்றவர்களிடமும் மக்களிடமும் நிதி திரட்டி செய்து இருக்கலாம். அதற்கு முயற்சி எடுக்காதது ஏன்?

பச்சை தமிழன் என்கிறீர்களே, கர்நாடகாவுக்கு எதிராக காவேரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திறந்து விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் செய்வதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா?

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டபோது இந்த ரஜினிகாந்த் எங்கே போனார்?

உலகமே வியக்கும் விதமாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக புரட்சி ஏற்பட்டபோது வாய்மூடி மௌன சாமியாராக இருந்த நீர் இப்போது சிஸ்டம் சரியில்லை என்பது நகைப்புக்குரியது. 

உன்னைவிட குறைவான சம்பளம் பெறுகின்ற பெரும் நடிகர்கள் விவசாய தற்கொலைக்காக உதவி செய்து உள்ளார்கள். நீர் உன்னுடைய வருவாயிலிருந்து தமிழக மக்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் நீர் செய்த நல்ல செயல்கள் ஒன்றையாவது உங்களால் சொல்ல முடியுமா?

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை நகரமே மழை வெள்ளத்தால் தத்தளித்ததே அந்த சமயத்தில் உன்னுடைய திருமண மண்டபத்தைக் கூட திறந்து ஏழை எளிய மக்களை தங்க வைத்து உணவு அளிக்காத நீர் தமிழக மக்களுக்கு என்ன செய்துவிடுவாய்.

தமிழகத்தை சம்பாதித்து கர்நாடகாவில் தொழில் நிறுவனங்களை தொடக்கி கர்நாடகர்களுக்கு வேலை கொடுக்கும் நீ. தமிழகத்தில் ஒரு தொழில் நிறுவனங்களையாவது தொடக்கி தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாயா?

இதையெல்லாம் செய்யாத நீ ஏதோ வானத்திலிருந்து குதித்த தேவனைப்போல் தமிழகத்தில் அரசு சிஸ்டம் சரியில்லை என்பதை பற்றி கூற ஒரு அருகதையும் உனக்கு இல்லை நீர் யாருடைய கைப்பாவையாக இருந்து கொள். தமிழர்களை முட்டாள் என்று நினைக்காதே காலம் வரும்போது உனக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.நன்றி என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!