மாணவர்கள் கவனத்திற்கு ! 6 முதல் 9 பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !

Published : Mar 09, 2022, 06:31 AM IST
மாணவர்கள் கவனத்திற்கு ! 6 முதல் 9 பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் !

சுருக்கம்

பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதல் மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகரிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நம் பள்ளி நம் பெருமை :

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், “நம் பள்ளி – நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

தேர்வு எப்போது :

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பள்ளிகல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 

6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும். கொரோனா காரணமாகவே தேர்வுகளில் மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும்.அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதல் மாணவர் சேர்க்கை நடந்துள்ள நிலையில் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகரிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!