மறுபடியும் எகிறிய கொரோனா…. தமிழகத்தின் இன்றைய நிலை….

Published : Sep 25, 2021, 08:44 PM IST
மறுபடியும் எகிறிய கொரோனா…. தமிழகத்தின் இன்றைய நிலை….

சுருக்கம்

தமிழகத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன.

சென்னை: தமிழகத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன.

தமிழகத்தில் தினசரி கொரோன பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்றைய நிலவரம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1724 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக கொரோனா தொற்று பதிவானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 55ஆயிரத்து 572 ஆக உள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1635 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி இருக்கின்றனர். இதனுடன் சேர்த்து 26 லட்சத்து 2 ஆயிரத்து 833 பேர் குணம் பெற்று உள்ளனர். இன்னமும் 17,263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 22 பேர் பலியாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,476 ஆக உயர்ந்திருக்கிறது என்று செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!
சென்னையில் அதிர்ச்சி! ஸ்கேன் எடுக்க சென்ற 48 வயது பெண்! கண்ட இடத்தில் கை வைத்த 28 வயது இளைஞர்!