மேகதாது! கர்நாடக அரசை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ்!

Published : Nov 13, 2025, 10:30 PM IST
Selvaperunthagai and DK Sivakumar

சுருக்கம்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாடமல் காவிரி நீர் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம் என தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா மாநில அரசு சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் புறக்கணிப்பு

காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம், காவிரி நீர் பகிர்வு குறித்த நிலைமைகள், தமிழக விவசாயிகளின் ஆயுள் வாழ்வாதாரம் ஆகியவற்றை முழுமையாக புறக்கணிக்கும் வகையில் இந்த அனுமதி அமைந்துள்ளது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், சுற்றுச்சூழல் சமநிலை, தமிழகத்தின் சட்டபூர்வமான பங்கு ஆகிய அனைத்தும் ஆபத்துக்கு உள்ளாகும் நிலையில், மேகதாது அணை திட்டம் எந்த வகையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெளிவாக வலியுறுத்துகிறது.

நதிநீர் பகிர்வு அமைப்பில் குழப்பம்

தமிழகத்தின் நீர் பங்கீட்டினை குறைக்கும் எந்த முடிவையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இந்த முடிவு தமிழக விவசாயிகளின் நம்பிக்கையை மட்டுமே பாதிக்காமல், இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பகிர்வு அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது.

தமிழக அரசுடன் துணை நிற்போம்

இச்சூழ்நிலையில், தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டியுள்ள குறிக்கோள்கள் மற்றும் முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் முன்வைத்து, மேகதாது அணை திட்டத்தை தடுக்க அரசோடு இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் சட்டபோராட்டம் நடத்த என்றும் உறுதுணையாக நிற்கும்.

மத்திய அரசு தலையிட வேண்டும்

தமிழகத்தின் நீருரிமை, விவசாய உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எந்த விலையையும் கொடுத்து காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசும் உரிய தலையீடு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

 

 

கர்நாடக அரசை கண்டிக்காதது ஏன்?

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவால் தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அடிக்கடி சொல்லி வருகின்றனர்.

அந்த மாநில சட்டப்பேரவையிலும் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளனர். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தனது அறிக்கையில் எந்த இடத்திலும் ஒரு வார்த்தை கூட‌ கர்நாடக அரசை கண்டிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கேள்வி

கர்நாடகாவில் ஆள்வது காங்கிரஸ் என்றாலும், தமிழக விவசாயிகளின் நலனை விட கட்சியின் பாசம் தான் செல்வபெருந்தகைக்கு அதிகமாக உள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!