டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன்: நிதியுதவி, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய உதயநிதி!

Published : Aug 23, 2023, 12:08 AM IST
டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன்: நிதியுதவி, விளையாட்டு உபகரணங்களை வழங்கிய உதயநிதி!

சுருக்கம்

டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30.50 இலட்சம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில், சைக்கிளிங் (Cycling), செயிலிங் (Sailing), பளுதூக்குதல் (Weightlifting) மற்றும் கராத்தே (Karate) உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்குபெற்று வரும் 6 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30.50 இலட்சம் மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.

அதன்படி, சைக்கிளிங் வீராங்கனை எம். பூஜா சுவேதாவிற்கு கார்பன் பிரேம் மற்றும் கார்பன் சக்கரங்களை வாங்குவதற்காக ரூ.12,30,000/-ம், ராயல் மெட்ராஸ் யாட் கிளப்பிற்கு தேசிய செயிலிங் போட்டிகளுக்காக ரூ.5,00,000/-ம் வழங்கப்பட்டது.

Chandrayaan3 mission இஸ்ரோ தலைவர்: யார் இந்த சோம்நாத்?

மேலும், உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகளில் சீனியர், ஜூனியர் மற்றும் யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் எல். தனுஷ், வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் வி. கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதம் பரிசுத்தொகையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன், சைக்கிளிங் வீராங்கனை கௌரி மிஷ்ராவிற்கு சர்வதேச சைக்கிளிங் போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ.10,00,000/-ம், கராத்தே வீரர் எஸ். சாய் பிரஜன் சர்வதேச கராத்தே போட்டிகளில் பங்குபெறுவதற்காக ரூ.2,20,000/- என மொத்தம் ரூ.30.50 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிக்கான காசோலைகளை டி.என்.சாம்பியன்ஸ் பவுன்டேஷன் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐஏஎஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

Onion Price: தாறு மாறா குறையப்போகும் வெங்காயம் விலை! மூட்டை மூட்டையாய் வாங்கிச்செல்ல நேரம் வந்தாச்சு.! என்ன காரணம் தெரியுமா?
Sugar Hoarding Law: 100 கிலோ சர்க்கரையை வீட்டில் வைத்தால் தண்டனையா? சட்டம் என்ன சொல்கிறது?