நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்.. மாணவர்கள் எவ்வாறு முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவது..? முழு விபரம்..

By Thanalakshmi VFirst Published Jun 16, 2022, 10:51 AM IST
Highlights

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. 
 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. 10 ஆம் வகுப்புக்கு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்ச மாணவ - மாணவியர் எழுதினர். 

மேலும் படிக்க: 17 வயது சிறுவன் ஓட்டிவந்த ரேஸ் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட தலைமையாசிரியர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி

விடைத்தாள் திருத்தம் பணி நிறைவு:

இதனை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணியானது கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சுமார் 83 மையங்களில் நடைபெற்றது. மேலும் விடைத்தாள்களை திருத்தம் செய்து, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு:

இதனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன் நாளை காலை 10 மணிக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு அரசு தேர்வுத்துறை சார்பில் முறைப்படி அறிவிக்கப்படும். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளம் மூலம் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க: மேகதாது தொடர்பாக பேச தமிழக அரசுக்கு உரிமை இல்லையா..! பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்
 

click me!