17 வயது சிறுவன் ஓட்டிவந்த ரேஸ் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட தலைமையாசிரியர்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி

By vinoth kumarFirst Published Jun 16, 2022, 9:41 AM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தென்னூரில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க தலைமை ஆசிரியர் ராஜி (55) வந்திருந்தார். அப்போது, விலை உயர்ந்த ரேஸ் பைக்கில் 17 வயது சிறுவன் அதிவேகமாக வந்துகொண்டிருந்ததார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமை ஆசிரியர் மீது பைக் மோதியுள்ளது. 

கும்பகோணம் அருகே ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே 17 வயது சிறுவன் அதிவேகத்தில் ஓட்டிவந்த ரேஸ் பைக் மோதி, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேஸ் பைக்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தென்னூரில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க தலைமை ஆசிரியர் ராஜி (55) வந்திருந்தார். அப்போது, விலை உயர்ந்த ரேஸ் பைக்கில் 17 வயது சிறுவன் அதிவேகமாக வந்துகொண்டிருந்ததார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமை ஆசிரியர் மீது பைக் மோதியுள்ளது. 

தலைமை ஆசிரியர் பலி

இதில், தூக்கி வீசப்பட்ட ஆசிரியர் ராஜூ ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜூ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

போலீஸ் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விலை உயர்ந்த ரைஸ் பைக்குகளை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதால் இளைஞர்கள் அதிவேகத்தில் பைக்கை இயக்குவதால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த 12ம் தேதியன்று வண்டலூர் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் விபத்தை ஏற்படுத்தியதில் ஸ்கூட்டரில் சென்ற ஓய்வு பெற்ற பெண் காவலர் ஆய்வாளர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- 180 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ரேஸ்.. தூக்கி வீசிப்பட்ட பெண் எஸ்.ஐ.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

click me!