எந்தவோரு அமைச்சர்களும் ரோட்டுல நடக்க முடியாது என மிரட்டல்.. மன்னார்குடி ஜீயருக்கு எதிராக பறந்த புகார்..!

By vinoth kumar  |  First Published May 6, 2022, 1:57 PM IST

இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.


அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மன்னார்குடி ஜீயர் மீது தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பல்லாக்கில் தூக்கி செல்லும் விழா

Tap to resize

Latest Videos

undefined

தருமபுர ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதவி வகித்து வருகிறார். பட்டின பிரவேசம் என்று பெயரில் இவரை பல்லாக்கில் தூக்கி செல்லும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில் கோட்டாச்சியார் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆதீனம் மாசிலாமணி கண்டிப்பாக பல்லக்கில் ஏறுவார். முடிந்ததை பாருங்கள் என்று பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகள் கூறிவருகின்றன. 

மன்னார்குடி  ஜீயர் மிரட்டல்

இந்நிலையில், தஞ்சையில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது;- பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை எந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது.

திராவிடர் கழகம் புகார்

மேலும், இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைச்சர்கள் நடமாட முடியாது என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மன்னார்குடி ஜீயர் மீது தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

click me!