தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது தேர் இழுக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் வரும் போது மின்கம்பத்தில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது தேர் இழுக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது தேர் திருவிழா. தஞ்சை பூதலூர் சாலையை அடுத்து களிமேடு பகுதியில் தேர் வரும் போது மின்கம்பத்தில் தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணையப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயை அணைத்து படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.