தஞ்சை தேர் திருவிழா விபத்து.. தேங்கிய தண்ணீரால் உயிர்பிழைத்த 50 பேர்.. வெளியான பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Apr 27, 2022, 8:12 AM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 

தேரை சூழ்ந்திருந்த தண்ணீர் காரணமாக 50 பேர் தள்ளி நின்றதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுது. 

தேர் திருவிழா விபத்து

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. 

உயிரிழந்தவர் விவரம்

தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. மோகன்(22), பிரதாப்(36), ராகவன்(24), அன்பழகன்(60),  நாகராஜ்(60), சந்தோஷ்(15), செல்வம்(56), ராஜ்குமார்(14), சுவாமிநாதன்(56), கோவிந்தராஜ்(45), பரணிதரன்(13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

உயிர்பிழைத்த 50 பேர்

இந்நிலையில் தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார். 

click me!