சகோதரி வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் 4வது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பால்கனியின் கதவைத்திறந்து வெளியில் சென்றுள்ளது.
கும்பகோணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நான்கரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெசன்ட் சாலையில் வசித்து ராஜா. இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு நான்கரை வயதில் கோபிகா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில், பச்சையப்பன் தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். சகோதரி வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் 4வது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பால்கனியின் கதவைத்திறந்து வெளியில் சென்றுள்ளது.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நான்கரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.