TN Agri Budget 2022 : MRK panneerselvam: வேளாண் பட்ஜெட்டில் பம்பு செட்களுக்கான மானியம் பற்றி தெரியுமா?

Published : Mar 19, 2022, 04:36 PM ISTUpdated : Mar 19, 2022, 04:38 PM IST
TN Agri Budget 2022 : MRK panneerselvam: வேளாண் பட்ஜெட்டில் பம்பு செட்களுக்கான மானியம் பற்றி தெரியுமா?

சுருக்கம்

TN Agri Budget 2022 :தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2-வது வேளாண் பட்ஜெட்டில் விவசாயத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் நீர்பாசனத் துறைக்கும் அதற்கான பம்புசெட்டுக்கும் ஏராளமான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2-வது வேளாண் பட்ஜெட்டில் விவசாயத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் நீர்பாசனத் துறைக்கும் அதற்கான பம்புசெட்டுக்கும் ஏராளமான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியதாவது:

முதல்வர் சூரியசக்தி பம்புசெட்

மின்வசதி இல்லாத விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாரைப் பயன்படுத்தி, நீர்பாசன வசதி பெறுவதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் அதிகட்சமாக 10ஹெச்பி வரை தனித்து இயங்கும் மோட்டார்களை பயன்படுத்தலாம். 10ஹெச்பி திறனில் 3ஆயிரம் பம்பு செட்டுகள் 70% மானியத்தில் வழங்குவதற்காக ரூ.65.34 கோடி மத்திய அரசு உதவியுடன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பழுதுநீக்குதல்

விவசாயிகளின் வேளாண் எந்திரங்கள், சூரியசக்தி பும்புசெட்களை காலவிரயமின்றி அவர்களின் இருப்பிடத்திலேயே பழுதுநீக்கி பரமாரிக்கப்பட உள்ளது. இதற்காக வேளாண் பொறியில் பட்டம் வென்றவர்கள், அல்லது பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் மூலம் விவசாயிகள் உதவி செய்யப்பட உள்ளது. இந்த தலா 8 லட்சம் முதலீட்டீல் 50 சதவீத மானியத்துடன் 25 வேளாண் எந்திரங்கள், சூரியசக்தி பம்பு செட்களை பழுதுநீக்கும் பராமரிப்பு மையங்கள் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் மத்திய அ ரசின் உதவியுடன் அமைக்கப்படும்

மானியத்தில் மின்மோட்டர் பம்புசெட்கள்

5ஏக்கர் நிலம்வரை வைத்திருக்கும் விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்களை வாங்கவும், திறன்குறைந்த பழைய மோட்டார்களை மாற்றி புதிதாக வாங்கவும்,  5ஆயிரம் விவசாயிகளுக்கு மானியம் தரப்பட உள்ளது. ஒருமின்மோட்டாருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும் இதற்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி மத்திய அரசின் உதவியுடன் ஒதுக்கப்பட்டுள்ளது

செல்போனில் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள்

விவசாயிகள் இரவு நேரத்தில் வயல்களுக்குச் சென்று நீர்பாய்ச்சும்போது ஏற்படும் விபத்துகள், பாம்புக்கடி உயிரிழப்புகள் ஆகியவற்றைத் தடுக்கும்வகையில் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்களை தொலைவில் இருந்தே செல்போன் மூலம் இயக்கும், கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்காக 50 சதவீத அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.1.01 கோடி மத்திய அரசு உதவியால் ஒதுக்கப்படும்.

பண்ணைக் குட்டைகள்

2022-23ம் ஆண்டில் 373 பண்ணைக் குட்டைகள் ரூ.3.73 கோடியில் 100 சதவீத மானியத்தில் வேளாண்வளர்ச்சிக்காக அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறும் வகையில் பழச்செடிகள் , மரக்கன்றுகள் வளர்க்க உதவி செய்வதுடன், மீன் வளத்துறையுடன் இணைந்து பண்ணைக் குட்டையில் மீன் வளர்க்க உதவி கோரப்படும்.

சோலார் கூரை தானிய உலர்த்திகள்

சூரியசக்தியைக் கொண்டு தானியங்கள், எண்ணெய் வித்துகள், ஆகியவற்றை உலர்த்தும் எந்திரங்கள் மானியத்தில் தரப்பட உள்ளன. நன்கு விளைச்சல் உள்ள காலத்தில் குறைந்த விலைக்கு விற்காமல் இந்த சூரிய உலர்த்திக்கூரை மூலம் காயவைத்து எடுத்து, நல்ல விலை வரும்போது விவசாயிகள் விற்று பயன் பெறலாம். 140 சூரிய கூரை உலர்த்திகள் 40% மானியத்தில் வரும் ஆண்டில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ3 கோடி மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும்.

இ்வ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்


 

PREV
click me!

Recommended Stories

காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்
Tamil News Live today 14 December 2025: காமராஜரை தப்பா பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன்.! திருச்சி வேலுச்சாமி ஆவேசம்