Chennai Metro: அசத்தல் அறிவிப்பு.. இனி மெட்ரோ இரயிலில் பயணிப்பவர்களுக்கு ஜாலி தான்.. வருகிறது புதிய வசதி..

Published : Mar 19, 2022, 04:33 PM IST
Chennai Metro: அசத்தல் அறிவிப்பு.. இனி மெட்ரோ இரயிலில் பயணிப்பவர்களுக்கு ஜாலி தான்.. வருகிறது புதிய வசதி..

சுருக்கம்

சென்னையில் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

தற்போதைய காலகட்டத்தில், மெட்ரோ இரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில், கூட்ட நெரிசலின்றி, சகல வசதிகளுடன் பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. மேலும் பேருந்து, இருசக்கர வாகனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்லும் நேரமும் குறைவாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படும் பயணங்கள் இதன் மூலம் எளிதாக்கப்படுகிறது. இதனால் சென்னையில் அலுவலகம் செல்பவர்களின் பெரும்பாலானோரின் முதல் சாய்ஸாக  மெட்ரோ இரயில் உள்ளது.

கொரோனா மூன்றாம் அலையால் ஜனவரி மாதம் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 க்கும் மேல் பதிவானது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரவு ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு, நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. இதனால் மெட்டோ சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு நன்கு குறைந்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் தற்போது மெட்ரோ இரயில் சேவை நேரம் பழையப்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படுகிறது. 

இந்நிலையில் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர்பகுதிகளுக்கு செல்லும் இரயில்களின் பயணச்சீட்டை  பெறும் வசதி செய்யப்பட்டு வருகிறது.மேலும் மெட்டோ நிலையங்களில் தென்னக ரயில்வே பயணச்சீட்டை பெறும் வசதி கூடிய விரைவில் அமலுக்கு வர உள்ளது.

இதை தவிர, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில்  இருந்து ஐ.டி மற்றும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு அந்தெந்த நிறுவனங்களே மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுப்போன்று வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மெட்டோ இரயிலில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுக.. பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!