களத்தில் இறங்கிய சீமான்! தென்காசிக்கு வேட்பாளர் அறிவிப்பு! யார் இந்த கௌஷிக் பாண்டியன்?

Published : Mar 04, 2025, 06:14 PM ISTUpdated : Mar 04, 2025, 06:32 PM IST
களத்தில் இறங்கிய சீமான்! தென்காசிக்கு வேட்பாளர் அறிவிப்பு! யார் இந்த கௌஷிக் பாண்டியன்?

சுருக்கம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள். தென்காசி தொகுதி வேட்பாளராக கௌஷிக் பாண்டியனை சீமான் அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற  தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். சட்டமன்றம், நாளுமன்றம் மற்றம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்து அதிரடி காட்டியுள்ளார். 

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக சீமான் வருகை தந்துள்ளார். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

இதையும் படிங்க: 2026 தேர்தலில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி! இல்லைனா இதுதான் நடக்கும்! சொல்வது யார் தெரியுமா?

இதையடுத்து சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று சீமான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இவர் கடந்த 2023ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினரான இணைந்தார். தற்போது நாம் தமிழர் கட்சியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!