Tiruppur Corporation Election Result 2022 : திருப்பூரை அசால்ட்டாக கைப்பற்றிய 'திமுக..' அதிமுக படுதோல்வி !!

By Raghupati RFirst Published Feb 22, 2022, 11:38 AM IST
Highlights

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி  வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க 32 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகள் 28 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக 58 வார்டுகளிலும், த.மா.கா 2 வார்டுகளிலும் போடடியிடுகின்றன. ஆனால், 60 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னம் தான் களம் காண்கின்றனர்.

சீட் கிடைக்காத அதிருப்தியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த பலர் ஆங்காங்கே சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட சுயேச்சைகைள் போட்டியிடுவது, இரண்டு கட்சிக்குமே ஆபத்துதான். தவிர தி.மு.கவை பொறுத்தவரை, அமைச்சர் சாமிநாதன் கோஷ்டி, செல்வராஜ் எம்.எல்.ஏ கோஷ்டி என்று ஏகப்பட்ட உள்கட்சி பூசல் நிலவுகிறது.

செல்வராஜின் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். சாமிநாதனின் ஆதரவாளரும், மற்றொரு மாவட்ட பொறுப்பாளருமான இல.பத்மநாபன் திருப்பூர் மேயர் ரேஸில் முன்னணி வகிக்கிறார். அதேபோல வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உதயநிதி செல்வாக்கில் மேயர் பதவிக்கு தனி ரூட் போட்டு காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் மட்டுமே மேயர் ரேஸில் இருக்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில், காங்கேயம், பல்லடம், திருமுருகன்பூண்டி, தாராபுரம், உடுமலை ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இதில் 6 நகராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று 6 நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

மேலும் மாவட்டத்தில் முத்தூர், மடத்துக்குளம், சாமளாபுரம், கணியூர், அவிநாசி, குன்னத்தூர், ஊத்துக்குழி, மூலனூர், ருத்ராவதி, கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், கன்னிவாடி தளி, கொமரமங்கலம், சங்கராமநல்லூர் ஆகிய 15 பேரூராட்சிகளிலும் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 6 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.

click me!