என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. ஜகா வாங்கிய அமைச்சர் கே.என் நேரு.. மீண்டும் எழுந்த சர்ச்சை

Published : Nov 16, 2025, 06:54 AM IST
KN Nehru

சுருக்கம்

திமுக அமைச்சர் கே.என். நேருவின் பெயரில் திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் அன்னதான நன்கொடை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலமாகும். தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதால், கோயிலின் அன்னதானப் பிரசாதம் மிகவும் முக்கியமான சேவையாக இருந்து வருகிறது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானச் சேவையின் ஒரு நாள் செலவு மட்டும் ரூ.44 லட்சம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவிக்கிறது.

அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்களும் தங்களின் பெயரில் ஒரு நாள் முழுச் செலவான ரூ.44 லட்சத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். அந்த நன்கொடையாளரின் பெயர் அன்றைய தினம் அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் பலகைகளில் வெளியிடப்படுவது இயல்பான ஒன்று. இந்த முறையைப் பின்பற்றி, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் திமுக மூத்த தலைவர் கே. என். நேற்று கடந்த 9ம் தேதி திருப்பதி கோயிலில் அன்னதானம் வழங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தி வெளியாகிய உடன், சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கேள்விகள் எழுந்தன. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான கடவுள் மறுப்பு தத்துவத்தை திமுகவின் மூத்த தலைவர், ஏழை மக்களை உதவுவதற்கு பதில், ஏற்கனவே செல்வச் செழிப்பாக இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏன் இத்தனை தொகையை வழங்கினார் என விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் திருப்பதி அன்னதான அரங்கின் டிஜிட்டல் திரையரங்கில் தெரிவிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அவரை குறிவைத்து மேலும் பல அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ​​“நான் பணம் கொடுக்கக்கூடாதா? கொடுத்திருந்தால் விமர்சனம் செய்யட்டும். எல்லோரும் என்னைப் பற்றி நல்லவனென்று சொல்ல மாட்டார்கள்” என்று அவர் உணர்ச்சிவசப்பட்ட பதில் அளித்தார்.

மீண்டும் இதே விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, அமைச்சர் நேற்று புதிய விளக்கம் அளித்தார். “நான் திருப்பதி கோயிலுக்கு நன்கொடை கொடுக்கவில்லை. எனக்குப் 44 லட்சம் கொடுக்கத்தக்க தொகை இல்லை. அது என் குடும்பத்தினர் என் பெயரில் செய்தேன். நன்கொடை. எனக்குத் தெரிந்திருந்தால் நான் நிறுத்திவிட்டிருப்பேன்” என்று அவர் கூறினார். அவரது இந்த புதிய விளக்கம், முன்பு அளித்த பதிலை முரண்படுவதாக இருப்பதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவே தொடர்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்