முதல்வர் ஷோ காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்..? ஆந்திரா செல்லும் தனியார் நிறுவனம்.. இபிஎஸ் ஆவேசம்

Published : Nov 15, 2025, 03:17 PM IST
Edappadi Palaniswami

சுருக்கம்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதாக தெரிவித்திருந்த கொரிய நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள், என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?

பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்?

புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!