
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை வருவாய் கோட்டாட்சியர் அதிரடியாக பறிமுதல் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எரிச்சி பகுதியிலிருந்து அறந்தாங்கி நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அந்த வண்டியை கைகாட்டி மடக்கி நிறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர்.
பின்னர், வாகனத்தை சோதனை செய்த வருவாய் கோட்டாட்சியர், அதில் மணல் கடத்தப்பட்டு வந்ததை அறிந்து ஓட்டுநரின் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாக்கோட்டையைச் சேர்ந்த அருங்குளவனுக்கு சொந்தமான டிப்பர் லாரி என்பது தெரிய வந்தது.
பின்னர், மணல் கடத்திய குற்றத்துக்காக அந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.